எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் கல்கியின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்மை மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகும். இந்த நாவல் உங்களுக்கு இதையே இன்னும் தெளிவாய் விளக்கும். கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள். தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Reviews
There are no reviews yet.