தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமா!

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதை அனைத்து தமிழர்களும் விரும்புவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் அதற்காக தங்கள் உயிரைக் கூட பணையம் வைப்பார்கள். அந்த அளவிற்கு தமிழின்பால் நேசம் கொண்டவர்கள் இருக்கின்ற நிலையில் இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பிற மொழி பள்ளிகளுக்கு அனுப்பும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. சீனர்களை எடுத்துக் கொண்டோமானால் அவர்களில் 96% பேர் தங்கள் பிள்ளைகளை அவர்களின் தாய்மொழி பள்ளிகளுக்குத்தான் அனுப்புகின்றனர். ஆனால், நமது தமிழர்களில் […]

வாசிப்பு நம்மை மேன்மைப்படுத்துகிறது

ஒரே மண்ணில் வளர்கின்ற உரமிடப்பட்ட, உரமிடப்படாத இரு வேறு மரங்களின் வளர்ச்சியில் உள்ள வித்தியாசத்தை உணர்வது போல் வாசிப்புப் பழக்கம் உள்ளவர், வாசிப்பு பழக்கம் இல்லாத இரு வேறு மனிதர்களிடையே உள்ள வித்தியாசத்தை நம்மால் நன்கு உணர முடியும். வாசிப்பு ஒன்று மட்டுமே ஒரு மனிதனை அறிவுப்பூர்வமாக மாற்றும் ஆற்றல் கொண்டது என ஜெர்மன் நாட்டினர் முழுமையாக நம்புகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களில் 100% வாசிப்பு பழக்கம் கொண்டுள்ளனர். ஜெர்மன் நாட்டில்தான் முதன்முதலில் வாசிப்பிற்கு அதிக […]

தன்னம்பிக்கையே பலம்!

வாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாக சிலருக்குப் பூந்தோட்டமாக இருக்கலாம். பூந்தோட்டமாக அல்லது போராட்டமாக அமைந்தாலும் நாம் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல மாறி மாறி வரும். தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்களே கிடையாது! தோல்விகளைச் சந்திக்கும் பொழுது நம்மைச் மிளிரச் செய்வது தன்னம்பிக்கையே. தோல்வி என்றவுடன் துவண்டு போகாமல் அந்தப் பயத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். தன்னம்பிக்கை என்பது பிறர் நமக்குக் கொடுத்து வருவதில்லை. ஒரு சிட்டுக் […]

இணையவழி வர்த்தகம்

உலகிலுள்ள எந்தவொரு பொருளையும் இருக்கும் இடத்திலேயே வாங்கும் வசதி இன்றைய தொழில்நுட்ப உலகில் சாத்தியமாகியுள்ளது. பெரும்பாலும் உடை, காலணிகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என நமக்குத் தேவைப்படும் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கக் கூடிய வாய்ப்பு தற்போது பரவலாக உருவாகி உள்ளது. 1990களில், இணையம் மூலம் வியாபாரம் செய்ய மிகவும் தயங்கிய உலகம், இன்று அதன் மீது அதீத நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இணையம், கைத்தொலைபேசியின் ஆதிக்கம் அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், புதிய வணிக முறைகள் தோன்றிய […]

அலட்சியம் வேண்டாம்!

கொரொனாவிலிருந்து விடுப்பட்டு விட்டோம் என்று எண்ணிக் கொண்டு பலர் பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பின்பற்றாமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனால், நாட்டில் கொரொனா பாதிப்பு சம்பவங்கள் மீண்டும் இரண்டு இலக்க எண்ணை அடைந்துள்ளது. இது நீண்டு கொண்டே சென்றால் முன்பைவிட மிகப் பெரிய பாதிப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனப் பிரதர் மலேசிய மக்களை எச்சரித்துள்ளார். தற்போது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைக்கு உட்பட்ட இந்த நடமாட்டக் கட்டுப்பாடை நாம் முறையாகப் பயன்படுத்த தவறினால் இந்த நடமாட்டக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படலாம் […]

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா கூடாதா?

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று நிறைய பெற்றோர்களின் சிந்தனையில் குழப்பமான சூழ்நிலையில் ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நிறைய பெற்றோர்கள் என்னிடம் நேரடியாகவே தொடர்பு கொண்டு இது குறித்து ஆலோசனை கேட்ட சம்பவங்களும் உள்ளன. இதுபோன்று யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரே பதிலாக இந்தக் காணொளி மூலமாகக் கூறலாம் என இந்தப் பதிவை நான் செய்கிறேன். குறிப்பாக, பெற்றோர்களாகிய நாம் ஒன்றை உணர வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனை என்பது எல்லாக் காலக்கட்டத்திலும் […]

தற்கொலை ஒரு தீர்வல்ல!

சமீபக்காலமாக நம்மைச் சுற்றி நிறைய தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் ஒவ்வொரு நாற்பது நொடிகளில் ஓர் உயிர் தற்கொலையால் பிரிகிறது எனவும் வியக்கத்தக்க வகையில் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. சுய மதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டும்தான் இம்முடிவை நாடுகிறார்கள் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் பல […]

தந்தையர் தின வாழ்த்துகள்.

தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள்தான் தந்தையர் தினம். உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கமாகும். தாய் ஒரு குழந்தையைக் கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையைத் தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பைக் கூட அதட்டலாக […]

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

10 ஜுன் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்து பொருளாதாரத் துறைகளும் கட்டம் கட்டமாக மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என பிரதமர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் முதல் கட்டமாக, ஜூன் 24ஆம் திகதி எஸ்.பி.எம்., எஸ்.வி.எம்., எஸ்.டி.பி.எம்., எஸ்.டி.ஏ.எம் மாணவர்கள் கல்வி பயில மீண்டும் பள்ளிக்கூடம் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, […]

இயற்கையைப் போற்றுவோம்!

இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தும் இயற்கையே. இயற்கை என்பது இந்த உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் அருளிய வரப்பிரசாதம் ஆகும். அந்த இயற்கை அன்னை நமக்கு அளிக்கும் நன்மைகளோ கோடானுக் கோடி எனலாம். தெளிந்த நீரோடை, தூய்மையான காற்று, ஆரோக்கியமான உணவு, கண்களுக்குக் குளிர்ச்சியான அழகு என இயற்கையின் நன்மைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். […]