கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புகழ் பெற்ற வரலாற்று நாவல்களுள் ஒன்று பார்த்திபன் கனவு. கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்களால் கொண்டாடப்பட்ட இந்த வரலாற்று நாவல் சோழர்கள் நலிவுற்று, பல்லவர்கள் சிறப்புற்றிருந்த காலகட்டத்தில் நடந்ததாக கற்பனை செய்யப்பட்டு எழுதப்பட்ட கதையாகும்.
நரசிம்ம பல்லவனுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசனாகிய சோழ மன்னனின் ஒரு லட்சியக் கனவு பின்னர் அவனது மகனால் எப்படி நிறைவேறுகிறது என்பதை அழகு தமிழில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் கல்கி.
முதலாம் நரசிம்ம பல்லவன்,சிறுத்தொண்டர் எனப் புகழ் பெற்ற நரசிம்மரின் சேனாதிபதி பரஞ்சோதி, சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி, அக்கால கட்டத்தில் இந்தியப் பயணம் மேற்கொண்ட சீனப் பயணி சுவான்சாங் போன்ற நிஜ நாயகர்கள் பவனி வரும் இந்த நாவல் வரலாற்றின் உண்மையான கதாபாத்திரங்கள்,சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் படிக்கப் படிக்க அக்கால கட்டத்தில் அவர்களுடன் நாமே வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுவது உறுதி.
Reviews
There are no reviews yet.