ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கை மற்றும் அவன் செய்த அற்புதங்கள் ஆகியவற்றுடன் அவனது குடும்பக் கதையையும் ஹரிவம்சம் கொண்டுள்ளது. ஹரிவம்சம், இந்துக்களின் பெருந் தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் (குலத்தையும்) சொல்கிறது.
– மன்மதநாததத்
ஸ்ரீஹரியின் தலைமுறையில் அவதரித்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் கதையைச் சொல்வதே ஹரிவம்சமாகும்.மஹாபாரத மையப் பாத்திரமான கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு, இந்த ஹரிவம்சத்தில் புதைந்திருக்கிறது. ஹரிவம்சத்தையும் சேர்த்தால்தான் ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு நெருக்கமான எண்ணிக்கையை மஹாபாரதம் எட்டும்.
மூன்று பருவங்கள் கொண்ட ஹரிவம்சத்தில் முதல் பருவமான ஹரிவம்ச பருவத்தில், கிருஷ்ணரின் பிறப்புமற்றும் இளமைக் கால வாழ்க்கை விவரிக்கப்படுகின்றன.
இரண்டாம் பருவமான விஷ்ணு பருவம், மகாபாரத நிகழ்வுகளை விளக்குவதுடன், பகவத் கீதை உபதேசம் அர்ஜுனனுக்கு அருளப்படுவதையும் விவரிக்கிறது.
பவிஷ்ய பருவம், கலியுகம் தொடர்பான செய்திகளைவிளக்குகிறது.
முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்த செ.அருட்செல்வப்பேரரசன் இந்த முழு ஹரி வம்சத்தையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
Reviews
There are no reviews yet.