28ஆம் ஆண்டு குயில் நிறைவு விழா

மாணவர்களே! 28ஆம் ஆண்டு குயில் நிறைவையொட்டி உங்களுக்காக நாங்கள் பேச்சுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். விதிமுறைகளைப் பின்பற்றி போட்டியில் கலந்து ரொக்கப் பரிசினைத் தட்டிச் செல்ல மாணவர்களை அன்புடன் அழைக்கிறது குயில். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு RM1000 பரிசுத் தொகை காத்திருக்கின்றது!!!

போட்டிக்கான விவரங்கள் பின்வருமாறு:

தலைப்புகள்:
படிநிலை 1 – நான் கொரொனா பேசுகிறேன்
படிநிலை 2 – விபரீதமாகும் கைத்தொலைபேசி விளையாட்டுகள்
இடைநிலைப்பள்ளி – மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தம்

விதிமுறைகள்:

  1. முதலாவதாக நீங்கள் ஜெயபக்தியின் முகநூல் (facebook), படவரி (instagram) பக்கத்தை LIKE (விருப்பம்) செய்து பின்தொடர வேண்டும்.
  2. கொடுக்கப்பட்ட தலைப்புகளில் பேசி, அதனைக் காணொளி (video) எடுத்து, உங்களது முகநூல் அல்லது படவரி வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யவும்.
  3. உங்களது படைப்பினைப் பதிவேற்றம் செய்யும்போது #kuilpechupotti2020 #28thanniversary #jayabaktikuil எனும் (#) குறியீட்டைக் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  4. கீழ்க்காணும் வசனத்தைப் பயன்படுத்தி காணொளியைத் தொடங்கவும்.
    “நான் _. _ ஆண்டு மாணவன்/மாணவி. குயில் பேச்சுப் போட்டியில் நான் பங்கெடுத்துள்ளேன். (காரணம் கூற வேண்டும்).
  5. அதிகமாக LIKE கிடைக்கப் பெற்ற படைப்பு மட்டுமே வெற்றி பெற்ற படைப்பாகக் கருதப்படும்.
  6. போட்டியின் இறுதி நாள் 30 செப்டம்பர் 2020

பரிசு விவரம்:


இடைநிலைப்பள்ளி
முதல் பரிசு : RM500
இரண்டாம் பரிசு: RM350
மூன்றாம் பரிசு: RM200

படிநிலை 2
முதல் பரிசு : RM400
இரண்டாம் பரிசு: RM250
மூன்றாம் பரிசு: RM150

படிநிலை 1
முதல் பரிசு : RM300
இரண்டாம் பரிசு: RM200
மூன்றாம் பரிசு: RM100

11 thoughts on “28ஆம் ஆண்டு குயில் நிறைவு விழா

  1. Thana says:

    பங்குகொள்ளும்அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் கிடைக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *