அரவிந்த், அர்பாஸ் என்ற இரு வினோத ‘வணிகர்’களின் வாழ்கை, எதிர்பாராத வகையில் மோதிக்கொள்கிறது. இவர்களின், தந்திரமான, கொலைகார திட்டங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, மோதி, தாவி நியாயங்களுக்கு புறம்பாக ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டும் என்ற வெறியிலும், வேகத்திலும் செயல்படுகிறது.
ஆனால், இவற்றின் உள்ளில்… மென்மை புதைந்திருக்கிறது. சோகம் கவிந்திருக்கிறது… ரத்தம் கசிகிறது… தவிர சில விவரிக்க முடியாத அற்புதமான மகிழ்ச்சியின் உச்சங்கள் காத்திருக்கிறது… ஆக, ஒரு மனிதனே துஷ்டனும், துறவியுமா? வென்றவனும், தோற்றவனுமா? கருப்பும், வெள்ளையுமா?
அஷ்வின் சாங்கி சுவாரஸ்யமான நாவல்களின் நெசவாளி. இங்கு அவர் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், நிஜத்தையும், கற்பனையையும், சரித்திரத்தையும், புராணங்களையும், வணிகத்தையும், அரசியலையும், காதலையும், வெறுப்பையும் தன் சோற்கள் எனும் இழைகளால் நெதிருக்கிறார். உங்கள் கவனத்தை சற்றும் நழுவ விடாமல், பல அதிர வைக்கும் திருப்பங்களுடன், உங்கள் ஊகத்தைத் தூண்டிக்கொண்டே சென்று, சற்றும் எதிர்பாராத முடிவில் உங்களை அவர் ஆழ்த்தும் போது உங்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
‘இது நம்பிக்கையா… இல்லை விதியா?’
Reviews
There are no reviews yet.