ஐந்து வயது சிவகாமி சாட்சியாக நிற்கையிலே, அவள் அப்பாவை ராஜ துரோகி என்று காரணம் காட்டி கொலை செகிறார், மகிழ்மதி மகாராஜா. இந்த நாட்டை என்றாவது ஒரு நாள் அழிப்பேன் என்று சபதம் செகிறாள், சிவகாமி. சுமார் பதினேழு வயது ஆனவுடன், சிதிலமடைந்த தன் மூதாதையர் மாளிகைக்குச் சென்று ஒரு கையெழுத்து பிரதியை மீட்கிறாள். பைசாசி என்ற விசித்திரமான மொழியில் எழுதப்பட்ட புத்தகம்; அதில் உள்ள ரகசியம் அவள் அப்பாவை நிரபராதியா அல்லது துரோகியா என்று குறிப்பிட்டுச் சோல்லக் கூடியது.
இதற்கிடையில் கொள்கைகளில் பெருமை கொண்ட கட்டப்பா, இளம் அடிமை, தன் கடமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவன்; ஒரு அகம்பாவம் கொண்ட இளவரசனுக்கு சேவகம் செயும் கடமையில் மாட்டிக் கொள்கிறான். தங்களின் நிலைமையை கண்டு வெகுண்ட தன் தம்பி, சுதந்திரத்துக்காகப் போராடுவதால் அவனை பிரச்சனைகளிலிருந்து பாதுக்காப்பது கட்டப்பாவின் கூடுதல் பொறுப்பாக மாறுகிறது.
புத்தகத்தின் ரகசியத்தைக் கண்டறியும் போராட்டத்தில் சிவகாமி ஈடுபடுகிறாள்; அந்தப் பயணத்தில் அவள் சந்திக்கும் ஊழல் அதிகாரிகளும், புரட்சியாளர்களும், மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தை குறி வைத்து சதிகாரர்களுடன் செயல்படுகிறார்கள்; அரண்மனையில் வஞ்சகமும் சூழ்ச்சியும் நடப்பதைப் பற்றி அறிகிறாள்.
உச்சகட்ட லட்சிய கனவுடன் இருக்கும் பிரபு பணத்துக்காகவும், பதவிக்காகவும் எதையும் செயத் துணிகிறான். எழுபது வயது நிறைந்த பெண்ணின் தலைமையில் ஒரு ரகசிய வீரர்கள் குழு அடிமை வியாபாரத்தைத் தகர்க்கப் போராடுகிறது. வனத்தில் வாழும் பழங்குடியினர் கூட்டம், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவர்களுடைய புனித மலையை விட்டு அவர்கள் விரட்டப்பட்டனர். யுத்த களத்தில் மன்னனிடமிருந்து அதைக் கைப்பற்ற அவர்கள் திட்டம் தீட்டுகின்றனர்.
Reviews
There are no reviews yet.