ஜெயபக்தி தயாரிப்பில் பொன்னியின் செல்வன்!
தமிழ் மன்னர்களின் சரித்திரச் சுவடுகளைக் கதையமைப்பில் அற்புதமாக எடுத்தியம்பும் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை உலகிலேயே முதன்முறையாக தமிழகத்திற்கு அப்பால் மலேசியாவில் ஜெயபக்தி பதிப்பகம் சுயமாகப் பிரசுரித்துள்ளது. ஐந்து பாகங்கள் கொண்ட இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி மகிழுங்கள்.
எழுத்தாளர் கல்கி சோழர்களின் வரலாற்றுச் சம்பங்களுடன் தமது கற்பனைத் திறனையும் இணைத்து இயற்றிய எழுத்தோவியமே ‘பொன்னியின் செல்வன்’ எனும் புதினம். இராஜ ராஜ சோழனின் புனைப்பெயர்களுள் ஒன்றான ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரே இப்புதினத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.
இப்புதினம் புது வெள்ளம், சுழல் காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச் சிகரம் எனும் 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை இப்புதினத்தின் கதாநாயகனாக வடித்துள்ளார் கல்கி. யார் அந்த வல்லவரையன் வந்தியத்தேவன், கதாநாயகனுக்கும் இராஜ ராஜ சோழனுக்கும் என்ன தொடர்பு, அருள்மொழி வர்மன் அரியணை ஏறுவாரா, சோழ மன்னர்களின் ஆட்சி எத்தகைய சிறப்பு பெற்றது போன்ற வினாக்களுக்கான விடையை இப்புதினத்தைப் படிப்பதன்வழி அறிந்துகொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.