‘உண்பது நாழி, உடுப்பது நாலு முழம்’ என எளிமையான வாழ்க்கை அவ்வை காலத்தில் இருந்திருக்கிறது. இப்போது, கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகிவற்றைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு AI-யும் வந்துவிட்டது. கரு உருவா(க்கு)வதிலிருந்து கல்லறை போகும் வரை எல்லாவற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் நுழைந்துவிட்டன. அதனால், அடிப்படையான உணவு, தொலைத்தொடர்பு, பிரயாணம், வாழுமிடம், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கே பெரும் செலவு செய்தாகவேண்டிய கட்டாயம். இவற்றை எல்லாம் சமாளித்து, கெளவரவமாக வாழ வருமானம் தொடர்ந்து அதிகரிக்கவேண்டும். ஊதியம் தவிர வேறு ஏதாவது வருமானம் வேண்டும். தங்கம், வங்கி வைப்புக்கு கிடைக்கும் வட்டி போன்றவை மிகக் குறைவாக இருக்கின்றன. எல்லோரும் இல்லை என்றாலும் கணிசமானவர்கள் பங்குகளில் முதலீடு செய்து லாபம் செய்கிறார்கள். வேறு சிலர் பரஸ்பர நிதிகள் மூலம் கூடுதல் வருமானம் பார்கிறார்கள். அவர்கள் பணம் பார்க்கும் பங்குச் சந்தை என்றால் என்ன? அதில் எவர் முதலீடு செய்யலாம்? அதில் பணம் இழக்காமல் இருக்க என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? இப்படிப்பட்ட சில முக்கியமான கேள்விகளுக்குத் தமக்கே உரிய முறையில் எவருக்கும் புரியும் விதமாக விவரிக்கிறார், பங்குச் சந்தையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் உள்ள, பங்குகள், முதலீடு, இன்சூரன்ஸ், தங்கம், பொருளாதாரம் குறித்து கட்டுரைகள், தொடர்கள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியிருக்கும் சோம. வள்ளியப்பன். ஆங்கிலப் புத்தகங்கள், யுடியூப் வீடியோக்கள் போன்ற எதிலும் கிடைக்காத எளிமையான விளக்கங்களை சுவாரசியமாக, ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாகப் போகிற போக்கில் காட்டுகிறார் அபுனைவுகளில் சுவாரஸ்யமான நடையைக் கடைப்பிடிக்கும் டாக்டர் சோம. வள்ளியப்பன்.
Pangugalil Panam
RM57.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 9789395222341
Categories: Business, Management & Economics, Non Fiction
Weight | 0.4 kg |
---|---|
Dimensions | 21.5 × 14 × 1.5 cm |
Book Author | Soma. Valliappan |
Book Type | PaperBack |
Colour | Blue |
Language | Tamil |
Pages | 314 |
Published Year | 2023 |
Publisher | Zero Degree Publishing |
Reading Age | Adults |
Be the first to review “Pangugalil Panam” Cancel reply
Related products
Biography/ Sandror
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM29.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Hindu Sacred Books ( English)
RM44.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Business, Management & Economics
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Craft, Home and Lifestyle
RM1.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM23.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Business, Management & Economics
RM10.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Business, Management & Economics
RM74.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.