கொரொனா பெருந்தொற்று காரணமாக உலகமே வீட்டினுள் முடங்கி கிடக்கும் இச்சூழ்நிலையில் கல்வி நிலையங்கள் உட்பட பல துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம் எனச் சென்று கல்வி கற்ற சமுதாயம் இன்று வீட்டிலேயே மடிக்கணினி, கைத்தொலைபேசி முன்னால் அமர்ந்து பாடங்களைக் கற்கும் காட்சியையே நம்மால் வெகுவாகக் காண முடிகிறது. கல்வியை ஒரு வியாபாரமாக செய்து வந்த பல கல்வி நிறுவனங்கள் இன்று திவாலாகி உள்ளன. உலகிலேயே பணக்கார பல்கலைக்கழகம் எனக் கருதப்பட்ட […]
இன்று மே 16. நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத் திலகங்களுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் இனிய ஆசிரியர் தினநாள். முதலில் இத்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த ஆசிரியர் தினம். […]
வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள். வாழ்ந்து முடித்த வயதானவர்களின் மூலம் இளைய தலைமுறையினருக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறது கொரொனா. ஆம், இந்நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் எவர் எனப் பார்த்தால் அது 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான். பாதிக்கப்பட்ட இளையோர்களின் எண்ணிக்கை மிக குறைவே! இயற்கைக்கு எதிராக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அவர்களின் மூலம் நமக்கு உணர்த்துகிறது கொரொனா! தனிமையில் இருக்கும் மனிதனுக்குக் கொரோனா என்ன கற்றுக் கொடுத்தது? எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த கற்றுக் கொடுத்துள்ளது. மற்றவர்களுக்கு […]
வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள். தற்போது மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுபாடு ஆணையின்கீழ் இருக்கும் நாம் இச்சூழலுக்கு ஓரளவு பழகி விட்டோம் என்றே கூற வேண்டும். பல மனித உயிர்களைப் பழி வாங்கி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரொனா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடிய அரக்கனை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வகையில் இந்த அரக்கன் நமக்குப் பல வாழ்க்கை பாடங்களைக் கற்று கொடுத்துள்ளான் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரொனா கொடுத்திருக்கும் பாதிப்புகள், இழப்புகள், சரிவுகள் […]
அனைவருக்கும் வணக்கம். உலகையே தனது கட்டுப்பட்டுக்குள் வைத்து பல உயிர்களை தனது உணவாக்கி இன்று நம் அனைவரையும் இல்லச் சிறையில் அடைத்து நம்மை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரொனா என்ற நச்சுயிரியை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. இந்நோயை முற்றாக அழிக்கும் பொருட்டு உலக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நம் மலேசிய அரசாங்கம் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மக்கள் நடமாட்டக் கட்டுபாடு […]
- 1
- 2