காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்படி நம்மை ஓத வைத்து, உருக வைப்பவை தேவாரப் பதிகங்கள். பாடப்பாட பரவசம் தருபவை. அத்தகைய தேவாரப் பதிகங்களை நன்முறையில் பதிப்பித்து, வெளியிட்டு எங்கள் பதிப்புப் பணிக்கு நாங்களே மகுடம் சூடிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு வெகு நாளாய் இருந்து வந்தது. அந்த எண்ணம் இப்போது ஈடேறியிருக்கிறது. தேவாரப் பதிகங்கள் இசைப் பாடல்களாதலால், அவை பண்ணோடு பாடுவதற்கேற்ற முறையில் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பெற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இப் பதிப்பை உருவாக்கியிருக்கிறோம். திரு. பாலசுப்பிரமணிய முதலியாரின் 1935-ஆம் ஆண்டுப் பதிப்பு இதற்கு உறுதுணையாக அமைந்தது. மூவர் தேவாரங்களையும் தனித் தனிப் பாகங்களாக வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பக்திப் பனுவல் பிழையற வெளி வரவேண்டும் என்பதற்காக எங்கள் உச்சபட்சக் கவனக் குவிப்புத் திறனுடன் பணியாற்றியிருக்கிறோம். இதை பதிப்பித்ததன் மூலம் நாங்கள் பிறவிப் பேறு அடைந்திருக்கிறோம். இதைப் படித்து நீங்களும் பிறவிப் பேறு பெறுங்கள். தேன் உண்டால் இனிக்கும். ‘தேவாரம்’ என்று சொல்லிப் பாருங்கள். சொல்லும் போதே இனிக்கும். தெய்வப் பாடல்கள் அல்லவா ! சொல்லச் சொல்ல, பாடப் பாட இனிப்பவை தேவாரப் பாடல்களே. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்படி நம்மை ஓதவைத்து உருக வைப்பவை தேவாரப் பதிகங்களே. நம் ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பவை அவை. தேவாரப் பதிகங்கள் இசைப் பாடல்களாதலால் அவற்றைப் பண்ணோடு பாடுவதற் கேற்ற முறையில் பாடல்கள் இந்நூலில் சீர் பிரித்துப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. மூலப் பாடல்கள் முழுமையும் அடங்கிய இந்நூல் வரிசையில் மூவர் தேவாரமும் தனித் தனியே வெளியிடப் பெற்றுள்ளது. நாளும் தேவாரம் படியுங்கள்; நற்பிறவிப் பேற்றினைப் பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.