ஆயிரம் வருடத்திற்குமுன் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த இராஜராஜ சோழனின் இளமைக் காலத்தில், சோழநாடு, உட்பகையாலும் சண்டையாலும், அண்டை நாட்டு துரோகிகளின் சதியாலும் குழப்பத்தில் தத்தளித்த காலம். அமரர் கல்கி இதை மாபெரும் காவியமாகத் தீட்டினார். அது இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புதினம் மட்டுமல்ல.. தமிழர்களின் இதயத்தில் என்றும் நிறைந்து நிற்கும் காப்பியமும் ஆகும்.
‘பொன்னியின் செல்வன்’.
சரித்திரப் புகழ் பெற்ற இந்த சரித்திரக் கதை நூற்றுக்கணக்கான மறுபதிப்புகளைக் கண்டிருக்கிறது. பல வடிவங்கள் பெற்று சிறப்புப் பெற்றிருக்கிறது. நாடகம், காமிக்ஸ், ஊடகம், மற்றும் திரைக்காவியம் என்று பலப்பல வடிவங்கள். இதனைச் சுவை குன்றாமல் சுருக்கி t20 கிரிக்கெட் போல சுவாரசியமாகச் சுருங்கக் கூறினால் தமிழர் அனைவரும் படித்துப் பயன் பெறுவர் என்ற நோக்கத்தில் இதனை வெளியிடுகிறோம்.
கல்லூரிகளில் பிரபல ஆங்கிலக் கதைகளைச் சுருக்கி துணைப்பாடமாகத் தருவது போல ஒரு முயற்சி இது!
பிள்ளையாரைப் பிரும்மாண்டமாகச் செய்யலாம். மஞ்சளிலும் பிடிக்கலாம். இது மஞ்சப் பிள்ளையார் பிடிப்பது போன்ற செயல்!
Reviews
There are no reviews yet.