நாவலாசிரியர் லக்ஷ்மியின் ‘ கால முழுவதும் காத்திருப்பேன் ‘ நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா – அவள்தான் இந்த நாவலின் நாயகி -எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள். அவள் காலம் முழுவதும் காத்திருக்கிறாள். லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே சித்திரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து நித்யானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான் என்பதைக் கதைப் போக்கில் லக்ஷ்மி அழகாகவே சித்திரிக்கிறார்.
லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 – சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
Reviews
There are no reviews yet.