எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.
ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள்.
ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.
Reviews
There are no reviews yet.