இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல்.
· சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது?
· அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன?
· பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன? பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
· அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை?
· அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன? பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
Reviews
There are no reviews yet.