என் வேலை மீது வெறுப்பு. மேலும் என் கேர்ல் ஃபிரண்டு என்னை விட்டுச் சென்று விட்டாள். ஆ! அழகான ஸரா. ஸரா காஷ்மீர் பெண். அவளொரு இஸ்லாமியப் பெண். நான் சொன்னேனா, என் குடும்பம் கொஞ்சம் கட்டுப்பெட்டி தான். பரவாயில்லை, விட்டுத் தள்ளுங்கள். நான்கு வருடங்களுக்கு முன்னால் எனக்கும் ஸராவுக்கும் பிரேக் அப் ஆனது. அவள் தன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டுவிட்டாள், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.
ஒவ்வொரு இரவும் அவளை மறப்பதற்காகக் குடித்தேன். அவளை போனில் அழைத்தேன், மெசேஜ் செய்தேன், சமூக ஊடகங்களில் அவளை நிழல் போல் தொடர்ந்தேன். அவள் என்னைப் புறக்கணித்தாள்.
ஆனால், அன்று இரவு அவள் பிறந்தநாள், ஸரா எனக்கு மெஸேஜ் அனுப்பினாள். நாங்கள் தொடர்பில் இருந்தபோது நடந்துகொண்டது போல் என்னை அவளுடைய விடுதி அறை என் 105க்கு வரச் சொன்னாள். நான் போயிருக்கக்கூடாது, ஆனால் போனேன்… என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தினம்.
இது ஒரு காதல் கதை அல்ல. காதலில் சொதப்புவது எப்படி என்ற கதை.
ஃபைவ் பாயின்ட் சம்ஒன் மற்றும் 2 ஸ்டேட்ஸ் ஆகியவற்றை எழுதியவரின் மற்றொரு படைப்பு. வேக நடை, கேலியும் கிண்டலும் நிறைந்தது, கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் த்ரில்லர் நாவல், சமகால இந்தியப் பின்னணியில் ஆட்டிப் படைக்கிற காதல் மற்றும் குறிக்கோளைத் தேடும் வாழ்க்கையைச் சொல்வது.
Reviews
There are no reviews yet.