இந்நூல் தமிழ்க் கிறிஸ்தவத்தின் விவிலியமாகும். இதன் பேசுபொருள் கடலென விரிந்து செல்கிறது. வரலாற்றையும் சமகாலத்தையும் லாகவமாக இணைத்து விவாதிக்கிறார். இனவரைவியலின் மகத்துவத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். – முனைவர் பக்தவத்சல பாரதி * கிறிஸ்தவம் பல பிரிவுகளில் தமிழகத்தில் பரவிய, கால்கொண்ட தன்மையினைக் கிறிஸ்தவ வரலாறு பற்றிச் சிறிதும் அறியாதவர்களும் தெளிவாக அறியும் வண்ணம் வரலாற்று முறையில் இந்நூலை எழுதியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். படிக்கத் தூண்டுவதாகவும் வாசிப்பில் மகிழ்ச்சி கொள்ள வைப்பதாகவும் அமைந்துள்ளது. – முனைவர் மார்க்சிய காந்தி * தமிழக கிறிஸ்தவ வரலாற்றைத் தெளிவுபடுத்தும் முக்கியப் பங்களிப்பு. நாட்டார் மரபு முறையில் அந்தந்த ஊர்களில் வழக்கிலுள்ள பாடல்களை உள்வாங்கி அவை கூறும் வரலாற்றையும் பதிவு செய்துள்ள முறை வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும். – முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச. * தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது. கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு முற்றிலும் புதிய பார்வைகளை அளிப்பதால் ஒரு கலகப் புத்தகம் என்றும் இதனை அழைக்கமுடியும்.
Ariyappadatha Christhavam Part-1 & Part-2 / அறியப்படாத கிறிஸ்தவம் – ஒரு வரலாற்றுத் தேடல் தொகுதி -1 & தொகுதி -2
RM194.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
Reviews
There are no reviews yet.