Category Archives: Events

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா கூடாதா?

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று நிறைய பெற்றோர்களின் சிந்தனையில் குழப்பமான சூழ்நிலையில் ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நிறைய பெற்றோர்கள் என்னிடம் நேரடியாகவே தொடர்பு கொண்டு இது குறித்து ஆலோசனை கேட்ட சம்பவங்களும் உள்ளன. இதுபோன்று யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரே பதிலாக இந்தக் காணொளி மூலமாகக் கூறலாம் என இந்தப் பதிவை நான் செய்கிறேன். குறிப்பாக, பெற்றோர்களாகிய நாம் ஒன்றை உணர வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனை என்பது எல்லாக் காலக்கட்டத்திலும் […]

தற்கொலை ஒரு தீர்வல்ல!

சமீபக்காலமாக நம்மைச் சுற்றி நிறைய தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் ஒவ்வொரு நாற்பது நொடிகளில் ஓர் உயிர் தற்கொலையால் பிரிகிறது எனவும் வியக்கத்தக்க வகையில் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. சுய மதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டும்தான் இம்முடிவை நாடுகிறார்கள் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் பல […]

தந்தையர் தின வாழ்த்துகள்.

தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள்தான் தந்தையர் தினம். உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கமாகும். தாய் ஒரு குழந்தையைக் கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையைத் தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பைக் கூட அதட்டலாக […]

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

10 ஜுன் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்து பொருளாதாரத் துறைகளும் கட்டம் கட்டமாக மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என பிரதமர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் முதல் கட்டமாக, ஜூன் 24ஆம் திகதி எஸ்.பி.எம்., எஸ்.வி.எம்., எஸ்.டி.பி.எம்., எஸ்.டி.ஏ.எம் மாணவர்கள் கல்வி பயில மீண்டும் பள்ளிக்கூடம் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, […]

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை

இன்று மே 16. நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத் திலகங்களுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் இனிய ஆசிரியர் தினநாள். முதலில் இத்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த ஆசிரியர் தினம். […]