Thirukkural By Puliyur Kesign – Newly Published in Malaysia – with Meaning
திருக்குறள் – உரை புலியூர் கேசிகன்
திருவள்ளுவரின் திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புலியூர் கேசிகனின் உரை விளக்கம் புகழ் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புலியூர் கேசிகன் என்பவர் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர்.
இவரின் திருக்குறள் உரை நூல் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான மொழிநடையில் அமைந்திருக்கும். திருவள்ளுவர் ஈரடியில் ஒளித்து வைத்திருக்கும் மிகப் பெரிய தத்துவத்தைப் புலியூர் கேசிகன் மிக நேர்த்தியாகத் தமது உரை விளக்கத்தில் குறிப்பிட்டிருப்பார். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஈரடியில் அமைந்திருக்கும் திருக்குறளின் பொருளை விரைந்து புரிந்து கொள்ள புலியூர் கேசிகனின் திருக்குறள் உரை விளக்க நூல் பெரிதும் துணைபுரியும்.
திருக்குறள் மனிதர்கள் தம் அகவாழ்விலும் புறவாழ்விலும் இன்பமுடனும் நலமுடனும் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை பண்புகளைத் திறம்பட விளக்குகிறது.
ஜெயபக்தியின் புத்தம் புதிய வெளியீடான புலியூர் கேசிகனின் திருக்குறள் உரை நூல் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை RM9.90 மட்டுமே. இன்றே முந்துங்கள்! இந்நூலை வாங்கி, வாசித்துப் பயன் பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.