- மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்-பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: ராஜராஜன் – 16-09-09
Reviews
There are no reviews yet.