வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
வாழ்ந்து முடித்த வயதானவர்களின் மூலம் இளைய தலைமுறையினருக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறது கொரொனா. ஆம், இந்நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் எவர் எனப் பார்த்தால் அது 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான். பாதிக்கப்பட்ட இளையோர்களின் எண்ணிக்கை மிக குறைவே! இயற்கைக்கு எதிராக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அவர்களின் மூலம் நமக்கு உணர்த்துகிறது கொரொனா!
தனிமையில் இருக்கும் மனிதனுக்குக் கொரோனா என்ன கற்றுக் கொடுத்தது?
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த கற்றுக் கொடுத்துள்ளது.
மற்றவர்களுக்கு உதவி செய்யக் கற்றுக் கொடுத்துள்ளது.
சுத்தத்தைப் பேணக் கற்றுக் கொடுத்துள்ளது.
ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கற்றுக் கொடுத்துள்ளது.
இயற்க்கையைப் போற்ற கற்று கொடுத்துள்ளது.
கடவுளை நினைக்க கற்றுக் கொடுத்துள்ளது.
உடற்பயிற்சி, யோகம், தியானம் செய்ய கற்றுக் கொடுத்துள்ளது.
இப்படி பலவாறு அடுக்கிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் ஒரு மனிதனை மனிதனாக்கக் கூடிய பாடத்தை இந்தக் கொரொனா கற்றுக் கொடுக்கிறது. கற்றுக் கொள்வோமே!
மேலும், இந்தக் கொரொனா ஏற்படுத்தியிருக்கும் பெரும் பாதிப்புகளில் இருந்து எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உலக பொருளாதாரமே முடங்கிய நிலையில் அதை எவ்வாறு மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். சுயநலம் கருதாது நம் சுற்றுப்புறச் சூழலைக் கருத்தில் கொண்டு போராட வேண்டும்.
மாணவர்கள் முன்பைவிட கடுமையாக முயற்சியும் பயிற்சியும் செய்து பயில வேண்டும். விடுபட்ட பாடங்களை ஆசிரியர்களின் உதவியோடு, முனைப்போடு கற்க வேண்டும். உங்களின் விடாமுயற்சி ஒன்று மட்டுமே உங்களை மேன்மைப்படுத்தும். 2020ஆம் ஆண்டுக்கான யூ.பி.எஸ்.ஆர்., பீ.தி.3 ஆகிய அரசாங்கத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், மாணவர்கள் படிக்காமல் உல்லாசமாக இருக்கலாம் என நினைத்துவிட வேண்டாம். அந்த அரசாங்கத் தேர்வுகளுக்குப் பதிலாக பள்ளி அளவில் உங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். அத்தேர்வின் முடிவு உங்களின் இடைநிலைப்பள்ளிக்கான நுழைவை நிர்ணயிக்கும். மேலும், எஸ்.பி.எம்., எஸ்.தி.பி.எம் தேர்வுகள் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் தங்களுக்கு நிறைய கால அவகாசம் உள்ளது என மெத்தனப்போக்கோடு இருந்துவிட கூடாது. இந்த அவகாசம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக எண்ணி முன்பைவிட அதிக முயற்சியுடனும் கவனத்துடனும் பயில வேண்டும்.
சுய தொழில் செய்பவர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டும். வேலை செய்பவர்கள் தத்தம் முதலாளிமார்களின் நிலைமையையும் சற்று கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக வாழ வேண்டும். அரசாங்கம் கூறும் ஆலோசனைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும். தன்னலம் கருதாத செயல்களால் மட்டுமே நம்மால் இப்பொருளாதார சீர்கேட்டைச் சரிசெய்ய முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவோம். நிச்சயம் நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்!
அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்துப்பதிவு
Maanavargalukku ithu oru payanulla katturai.
அழகான கருத்துக்கள் அருமையான எடுத்துக் காட்டு. மறுக்க முடியாத உண்மை.
அருமை. படிப்பவரைச் சிந்திக்க வைக்கிறது. நன்றி
Miga arumai karuthu.. manitanin valkaiyai purati potta visayam. Kandippaga anaivarum padikka vendiya oru karuthu padivam.
வணக்கம், முற்றிலும் உண்மையான கூற்று. படிப்பவர்களை சிந்திக்க வைப்பது மட்டும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்தால் எதுவும் சத்தியமே என்பதை உணர்த்துகிறது. நன்றி…