Monthly Archives: June 2020

தற்கொலை ஒரு தீர்வல்ல!

சமீபக்காலமாக நம்மைச் சுற்றி நிறைய தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக உலகில் ஒரு வருடத்தில் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் ஒவ்வொரு நாற்பது நொடிகளில் ஓர் உயிர் தற்கொலையால் பிரிகிறது எனவும் வியக்கத்தக்க வகையில் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. சுய மதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டும்தான் இம்முடிவை நாடுகிறார்கள் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் பல […]

தந்தையர் தின வாழ்த்துகள்.

தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள்தான் தந்தையர் தினம். உலகம் முழுவதும் இந்தத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கமாகும். தாய் ஒரு குழந்தையைக் கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையைத் தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பைக் கூட அதட்டலாக […]

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

10 ஜுன் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்து பொருளாதாரத் துறைகளும் கட்டம் கட்டமாக மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என பிரதமர் தான் ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் முதல் கட்டமாக, ஜூன் 24ஆம் திகதி எஸ்.பி.எம்., எஸ்.வி.எம்., எஸ்.டி.பி.எம்., எஸ்.டி.ஏ.எம் மாணவர்கள் கல்வி பயில மீண்டும் பள்ளிக்கூடம் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, […]

இயற்கையைப் போற்றுவோம்!

இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தும் இயற்கையே. இயற்கை என்பது இந்த உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் அருளிய வரப்பிரசாதம் ஆகும். அந்த இயற்கை அன்னை நமக்கு அளிக்கும் நன்மைகளோ கோடானுக் கோடி எனலாம். தெளிந்த நீரோடை, தூய்மையான காற்று, ஆரோக்கியமான உணவு, கண்களுக்குக் குளிர்ச்சியான அழகு என இயற்கையின் நன்மைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். […]

கல்வி யுத்தம்!

கொரொனா பெருந்தொற்று காரணமாக உலகமே வீட்டினுள் முடங்கி கிடக்கும் இச்சூழ்நிலையில் கல்வி நிலையங்கள் உட்பட பல துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம் எனச் சென்று கல்வி கற்ற சமுதாயம் இன்று வீட்டிலேயே மடிக்கணினி, கைத்தொலைபேசி முன்னால் அமர்ந்து பாடங்களைக் கற்கும் காட்சியையே நம்மால் வெகுவாகக் காண முடிகிறது. கல்வியை ஒரு வியாபாரமாக செய்து வந்த பல கல்வி நிறுவனங்கள் இன்று திவாலாகி உள்ளன. உலகிலேயே பணக்கார பல்கலைக்கழகம் எனக் கருதப்பட்ட […]